வெளியானது ரஜினியின் வேட்டையன் போஸ்டர்!

நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் டீசர் கடந்த் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. அந்த, போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment