‘லியோ’ படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து இளைய தளபதி நடிக்கும் புதிய படத்தை வெங்கட் பிரபு டைரக்டு செய்கிறார். இது விஜயின் 68- வது படம்.
‘The Greatest Of All Time’ என இந்தப் படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக ‘கோட்’.
தந்தை – மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கும் இந்தப் படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே இடம் பெற்றுள்ளது.
மீனாட்சி சவுத்ரி, சினேகா ஆகியோர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கின்றனர்.
‘மைக்’ மோகன், பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், பிரேம்ஜி, யோகிபாபு, வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜய்ராய், லைலா ஆகியோரும் உள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
இந்தப் படத்துக்காக விஜய், ஒவ்வொரு நாடாக பறந்து கொண்டே இருக்கிறார். கடந்த நவம்பர் மாதம் தாய்லாந்து நாட்டில் இதன் ‘ஷுட்டிங்’ ஆரம்பமானது.
இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு இப்போது சென்னையில் முழு வீச்சாக நடந்து வருகிறது. இரண்டு வாரங்கள் படப்பிடிப்பு. இதனை முடித்துக்கொண்டு அடுத்த மாதம் முதல் வாரத்தில் படக்குழு, ராஜஸ்தான் மாநிலம் செல்கிறது.
இதன்பின் இலங்கையிலும், இஸ்தான்புல்லிலும் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
கோடை விடுமுறை தினத்தில் ‘கோட்’ வெளியாகும் என தெரிகிறது.
– பாப்பாங்குளம் பாரதி.