புதிய படத்தில் ஜோதிகா: வைரலான புகைப்படங்கள்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் ‘கங்குவா’. இந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும் என இயக்குநர் சிவா அனைத்து பேட்டிகளிலும் அடித்து கூறி இருந்தார்.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற கங்குவா பெரும் தோல்வியைச் சந்தித்தது.

இதனால் அதிர்ச்சியில் உறைந்த சூர்யா, இப்போது நடித்து முடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளார்.

இந்தப் படத்தைக் கார்த்திக் சுப்பராஜ் டைரக்ட் செய்துள்ளார். பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘ரெட்ரோ’ திரைப்படம் வரும் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சூர்யாவும், அவர் மனைவி ஜோதிகாவும் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள புகழ்பெற்ற காமாக்யா கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தனர்.

பழமையானதும், சக்தி வாய்ந்ததுமாக கருதப்படும் காமாக்யா கோவிலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட விஐபிக்கள் வருவது வழக்கம்.

இந்தக் கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில் தான் விரைவில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment