பால ராமருக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம்!

நடிகை சுகன்யா

அயோத்தியில் ராமர் திருக்கோவில் திறப்பதையொட்டி பிரபல நடிகையும் நடனக் கலைஞருமான சுகன்யா ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற பாடலை எழுதி, இசையமைத்து பாடியுள்ளார்.

பக்தி ரசம் சொட்டும் வகையில் அமைந்துள்ள இந்தப் பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் பாடும் வகையில் அமைந்துள்ளது.

பாடல் குறித்து பேசிய நடிகை சுகன்யா, “500 ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு திறக்கப்பட உள்ள நிலையில் நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது.

கோவில் கட்டுமான பணிகள் தொடங்கியபோது என் நெற்றியில் நான் வரைந்த ஸ்ரீ ராமர் ஓவியம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு பெற்றது. கோவில் திறப்பையொட்டி என்னுடைய சிறு பங்களிப்பாக இந்த பாடலை சமர்பிக்கிறேன்,” என்று கூறினார்.

அதோடு, “ஸ்ரீ ராமரின் நாம மகிமை, அவரது பராக்கிரமம், ராமாயண சுருக்கம் மற்றும் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள கோவிலை நாமும் காணும் பாக்கியம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது,” என்றார்.

‘ஜெய் ஸ்ரீ ராம்’ பாடலுக்கு பங்களித்த இசை வாத்திய கலைஞர்கள், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் மற்றும் அவரது குழுவினருக்கும் நன்றி தெரிவித்ததோடு ஸ்ரீ ராமரின் பரிபூரண அருள் மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று வேண்டுவதாகாவும் கூறினார்.

Comments (0)
Add Comment