நடிகர் கார்த்தியிடம் உள்ள ஸ்பெஷல்!

எஸ்.ஜே.சூர்யா உருக்கம்

கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (ப்ரோலாக்) முன்னுரை வீடியோ அண்மையில் வெளியானது.

சர்தார் முதல் பாகத்தைவிட பரபரப்பான திரில்லராக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் லுக் டீசர் அண்மையில் படக்குழுவினர் கலந்துகொண்டு கோலாகலமாக வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் எஸ்.ஜே. சூர்யா, ‘சர்தார் 2’ ஒரு ரிமார்க்கபிள் படம். மித்ரன் சார் வந்து கதை சொன்னபோதே, மிக மகிழ்ச்சியாக இருந்தது. என் கேரக்டர் மிக வித்தியாசமாக இருந்தது.

நம்ம நேட்டிவிட்டியுடன் இன்டர்நேஷனல் தரத்தில் நம் மக்களுக்கு புரிகிற மாதிரி, மிக அழகாக இந்தக் கதையை உருவாக்கியுள்ளார். 

இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிபெறும் எனும் நம்பிக்கை இருக்கிறது. நாயகன், தயாரிப்பாளர், இயக்குநர் என 3 அற்புதமான மனிதர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள படைப்பு இது. 

கார்த்தி சாரிடம் உள்ள ஸ்பெஷல், மூளை மனதிற்கு தடையில்லாமல் அவரிடம் வார்த்தைகள் வரும். மிக நல்ல மனதுக்காரர். மேக்கப் போடவே நாலு மணி நேரம் ஆகும். அதைப் பொறுத்துக்கொண்டு உழைத்துள்ளார். அவருக்கு இது மிகப்பெரிய வெற்றியைத் தரும்” என்றார்.

Comments (0)
Add Comment