சூர்யா – 43 படப்பிடிப்பு மதுரையில்!

சூரரைப் போற்று வெற்றிக்குப் பிறகு சூர்யா, சுதா கொங்கரா கூட்டணி மீண்டும் ஒன்றிணைந்து உள்ளது. சூர்யாவின் 43-வது படமாக உருவாகும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.

இதில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா, இந்தி நடிகர் விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

இதற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்‌. இது அவரது இசையில் உருவாகும் 100-வது திரைப்படமாகும்.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு படத்தின் இறுதி வார்த்தையான ‘புறநானூறு’ என்றதோடு கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரையில் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. சூரரைப் போற்று திரைப்படத்திலும் சூர்யா மதுரையை சார்ந்தவராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment