2005-ல் வெளியான ‘சந்திரமுகி’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்திற்கு பிறகு மீண்டும் ஒரே நாளில் ரஜினி – கமல் படங்கள் மோதிக்கொள்கின்றன. 17 வருடத்திற்கு பிறகு மீண்டும் ஒரே நாளில் ரஜினி – கமல் படங்கள் திரைக்கு வருகிறது!
தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழும் ரஜினி, கமல் படங்கள் இதற்கு முன்பு பல முறை ஒரே நாளில் வெளியாகியுள்ளது.
இந்த இருவர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகும்போது தனக்கு பிடித்த நடிகரின் பலத்தைக் காட்ட ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு படங்களைக் கொண்டாடுவார்கள்.
இப்படி 1978 தீபாவளிக்கு ரஜினி, கமல் நடித்த மூன்று படங்கள் ஒரே நாளில் வெளியாகின ரஜினிகாந்தின் தப்புத் தாளங்கள், தாய் மீது சத்தியம் படங்களும், கமல்ஹாசனின் சிவப்பு ரோஜாக்கள், மனிதரில் இத்தனை நிறங்களா படங்களும் வெளியாகின.
அதேவேளையில் ரஜினி – கமல் இணைந்து நடித்த அவள் அப்படித்தான் படமும் அந்த தீபாவளிக்கு வெளியானது.
இதனைத் தொடர்ந்து 1987 தீபாவளிக்கு மனிதன் – நாயகன் படமும், 1991ல் தளபதி, குணா படங்களும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன.
கடைசியாக 2005ல் சந்திரமுகி மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் ஒரு நாள் முன் பின் திரைக்கு வந்தது.
இந்நிலையில் தற்போது புதிதாய் வளர்ந்து வரும் ரீ-ரிலிஸ் ட்ரெண்டில் முத்து, ஆளவந்தான் படங்கள் டிசம்பர் 8ம் தேதி ஒரே நாளில் வெளியாக உள்ளது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
– தேஜேஷ்