‘மீரா’ திரைப்படம் எம்.எஸ்.சுப்புலெட்சுமிக்கு ஒரு தனிப்பட்ட வெற்றி. படப்பிடிப்பின்போது அவர் துவாரகை வீதிகளில் மீரா பஜன்களைப் பாடியபடி நடந்தபோதே இது தெரிந்துவிட்டது.
புனித யாத்திரை வந்தவர்கள் இதெல்லாம் சினிமா ஷூட்டிங் என்பதை நம்பவே மறுத்தார்கள்.
கிருஷ்ண பக்தர்களுக்கு அவர் மீராவின் மறுபிறவி. அவரது சொந்த பக்தி அவரது பாத்திரத்திற்கு ஒரு புனிதமான ஆழத்தைத் தேடித் தந்தது.
இது தான் மிகக் கடினமான மனிதரான எல்லிஸ். ஆர்.டங்கனை, திரைப்பட ஆய்வாளரான ராண்டார்கையிடம் ஒரு நேர்காணலின்போது “எம்.எஸ். நடிக்கவில்லை. படத்தில் அவர் மீராவாகவே மாறிவிட்டார்” என்று சொல்ல வைத்தது.
படத்தை விமர்சனம் செய்த பலரும் இதையே தான் கூறினார்கள்.
புகழ்பெற்ற கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சரோஜினி நாயுடு, படத்தின் இந்திப்பதிப்பில் ஒரு காட்சியில் அவரே தோன்றி,
“மீராவின் கதை இந்தியாவின் கதை. இந்திய நம்பிக்கை, பக்தி, பரவசத்தின் கதை. சுப்புலெட்சுமியின் திறன், அவர் மீராவாக நடிக்கவில்லை. அவர் தான் மீராவே என்று காட்டுகிறது” என்றார்.
***
– டி.ஜே.எஸ்.ஜார்ஜ் எழுதி தமிழில் சுப்பாராவ் மொழிபெயர்த்து பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி – உண்மையான வாழ்க்கை வரலாறு’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.