பானுப்பிரியாவின் ஸ்பெஷல் பெர்ஃபார்மன்ஸ்!

‘தமிழ் சினிமாவுல யாராலையும், இப்படி ஒரு சீனை டான்ஸோட சேர்த்து கம்போஸ் பண்ணிடவே முடியாது’ அப்படிங்கற அளவுக்கு மம்முட்டி, பானுப்ரியா, மதுபாலா நடிப்பில் வெளிவந்த அழகன் திரைப்படத்தில் பாலசந்தர் அவர்கள் க்ரியேட் பண்ண அட்டகாசமான சீன் இது.
 
அழகன் படம் ரிலீஸ் ஆகி 34 வருஷம் ஆகியிருக்கு. இந்த 34 வருஷத்துல இன்னொருத்தர் இந்த மாதிரி ஒரு சீனை ட்ரை கூட பண்ணதில்லை அப்படிங்கறதான் இந்த சீனோட அசுரபலம்.
 
ஏன்னா இந்த சீன்ல நடிச்ச நடிகை நடனத்துல ராட்சசி. அதுல சில குறிப்பிட்ட நொடிகளை கொடுக்கிறேன். நிறைய பேர் பார்த்திருப்பீங்க.. பார்க்காதவங்களுக்காக மென்ஷன் பண்ணி நான் சொல்றேன்..
 
அந்த சில நிமிடங்களை மட்டும் பாருங்க. பானுப்பிரியா, பாலச்சந்தர், மரகதமணி, கலா மாஸ்டர் இவங்க நாலு பேரும் எவ்ளோ பெரிய ராட்சசங்க அப்படின்னு உங்களுக்கு புரியும்..
அதுவும் நான் இந்த ஃபோட்டோவுல கொடுத்திருக்கிற ஒரு ஷாட்’ல(1:48:06), பானுப்பிரியா அவ்ளோ வேகமா ஆடிட்டு வந்து காத்துல எம்பி தரையில குதிப்பாங்க.. அப்போ கால் கீழ லேண்ட் ஆகிறதுக்கு முன்னாடி, ரெண்டு முட்டியும்தான் முதல்ல தரையில இடிச்சிட்டு உட்காருவாங்க.. இது எவ்ளோ கஷ்டமான ஷாட்டா இருக்கும் அப்படின்னு திங்க் பண்ணி பாருங்க.. (அதுக்கப்புறம் 1:47:31 to 1:49:25 இந்த குறிப்பிட்ட நொடிகள்’ல கமெண்ட்ல இருக்குற வீடியோவை க்ளிக் பண்ணி பாருங்க). ப்பா.. என்ன மாதிரியான ஒரு பெர்ஃபார்மன்ஸ் பண்ணி இருப்பாங்க..
 
டான்ஸ் ஆடிட்டே பேசணும். கோவமா பேசணும்.. ஆட்டிட்ட்யூட் மிஸ் ஆகக்கூடாது, எக்ஸ்பிரஷன்ஸ் மிஸ் ஆகக்கூடாது. டயலாக் மிஸ் ஆகக்கூடாது – இப்படி பல ‘கூடாது’ அதுல இருக்கும்.
 
‘கண்ணா வருவாயா’ன்னு எத்தனையோ மேடைகள்’ல ஆடி பாடி இருக்கேன். ஆனா எந்த கண்ணனுக்காகவும் நான் என் வாழ்க்கையில ஏங்குனது இல்ல’
 
அப்படின்னு ஆரம்பிச்சு பரதநாட்டியத்தோட அத்தனை ஆவேசமான முத்திரைகளையும் பிடிச்சுக்கிட்டு, கோவத்துல டயலாக்கை எமோஷனலா வெளுத்து வாங்கி இருப்பாங்க… இன்னைக்கு வரைக்கும் தமிழ் சினிமால ஐகானிக்’கா போற்றப்படக்கூடிய ஒரு காட்சி இது..
****
இந்த படத்தோட ஆரம்பத்துல ‘கோழி கூவும் நேரமாச்சு’அப்படின்னு ஒரு பாட்டு வரும். அந்த பாட்டுலயும் பிரமாதமா கலக்கி இருப்பாங்க..
 
‘நெஞ்சமடி நெஞ்சம்’ அப்படின்னு ஒரு பாட்டு.. இந்தப்பாட்டு குறிப்பிட்ட 2:05:50 செகண்ட்ல இருந்து ஆரம்பிக்கும்.. 
 
அந்தப் பாட்டோட நடுவுல வர்ற இண்டர்லூட் இசையில ஒரு டான்ஸ் ஆடி இருப்பாங்க. அதே மாதிரி அந்தப் பாட்டு முடியுற கடைசி 15 செகண்ட்ல ஒரு பேய் ஆட்டம் ஆடி இருப்பாங்க…
 
இது ரெண்டும் வெறித்தனமா இருக்கும். அதை இன்னொரு நடிகை பண்ணவே முடியாது அப்படிங்கற அளவுக்கு பின்னி பெடலெடுத்துருப்பங்க.
 
தமிழ் சினிமாவுல டான்ஸ்ல எத்தனையோ நடிகைகள் கலக்கி இருந்தாலும், பானுப்பிரியா அவர்களோட இந்த ஸ்பெஷல் பெர்ஃபார்மன்ஸ், வரலாற்றுல என்னைக்குமே நிற்கும்..
 
குறிப்பா, டான்ஸ் ஆடிட்டே கோபத்தோட பேசுற அந்த உச்சபட்ச எமோஷனல் காட்சி, Its a Classic….
 

#பாலசந்தர் #மம்முட்டி #பானுப்ரியா #மதுபாலா #அழகன் #balachandher #mamootty #banupriya #mathubala #azhagan

 

 

 

 
 
Comments (0)
Add Comment