எஸ்.ஜே.சூர்யாவுக்கு எவ்வளவு தீனி போட்டாலும் தீராது!

'சர்தார் 2' பட விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு

PS.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில், சர்தார் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2′ உருவாகியுள்ளது.

முதல் பாகத்தை விட பரபரப்பான திரில்லராக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, நம் கிராமத்தில் இருந்து ஒருவனைத் தேர்ந்தெடுத்து, அவனுக்கு டிரெய்னிங் தந்து, உளவாளியாக அனுப்பி வைத்தார்கள்.

இது உண்மையில் நடந்தது. அதை அருமையான கதையாக்கி படமெடுத்தார் மித்ரன். இப்போது அந்தப் பாத்திரம் திரும்ப வருவது மகிழ்ச்சி.

எல்லோரும் முதன் முறையாக ஒரு உளவாளி தனக்காக இல்லாமல், நாட்டுக்காக போராடுகிறான் என இந்தப் படத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்தப் படத்தில் இன்னும் பெரிய போரை நடத்தவுள்ளார் சர்தார்.

அதிலும் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிப்பது மகிழ்ச்சி. மித்ரன் மிகப் பிரம்மாண்டமாக இந்தக் கதையை உருவாக்கியுள்ளார்.

செட்டில் போய்ப் பார்க்கும்போது அவ்வளவு பிரமிப்பாக இருக்கும். லக்‌ஷ்மன் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

எஸ்.ஜே. சூர்யா சாருக்கு எவ்வளவு தீனி போட்டாலும் தீரவில்லை. இதிலும் அசத்தியுள்ளார். சாம்.சி.எஸ் ‘கைதி’க்கு பிறகு அட்டகாசமான இசையைத் தந்துள்ளார்.

படம் உங்களை கண்டிப்பாக திருப்திப்படுத்தும். இந்தப் ஃபர்ஸ்ட் லுக்கை உங்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment