‘சலார்’ சர்ச்சை; படக்குழு விளக்கம்!

சலார் திரைப்படம் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், வன்முறையான திரைப்படம் எடுக்கவில்லை என அதன் இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார்.

கேஜிஎஃப்-2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இரு நண்பர்களுக்கு இடையேயான படமென இயக்குநர் கூறியிருந்தார். நாளை திரைக்கு வரும் நிலையில் இந்தப் படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

சமீபத்தில் சலார் திரைப்படத்தின் டிரைலர் வெளியான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்தது.

தெலுங்கு சினிமாவை விட நான் எடுத்த படத்தில் வன்முறை இல்லை என பிரசாந்த் நீல் தெரிவித்து சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment