ஜிவி பிரகாஷ் படத்தில் கிரிக்கெட் வீரர் அஸ்வின்!

தமிழ்த் திரைப்படங்களில் அவ்வப்போது கிரிக்கெட் வீரர்கள் தலைகாட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜிவி பிரகாஷ் நடிக்கும் படத்தில் இடம்பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள `டியர்’ படம் வரும் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஏற்கனவே சமீபத்தில் வெளியான ஜிவி பிரகாஷின் `ரிபெல்’ மற்றும் `கள்வன்’ ஆகிய இரண்டு படங்களும் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில் `டியர்’ திரைப்படம் அவருக்கு ஹாட்ரிக் வெற்றிப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி பட்டையைக் கிளப்பி வருகிறது. இந்த ட்ரெய்லரில் வரும் வாய்ஸ் ரவிச்சந்திரன் அஸ்வினுடையது. ட்ரைலரைப் பார்த்து பிரமித்த ரசிகர்கள் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கின்றனர்.

செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தை இயக்கிய ஆனந்த் ரவிசந்திரன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment