‘அடிமைப் பெண்’ வெற்றி விழாவில் படக்குழுவினர்!

தென்னிந்திய நடிகையான பண்டரிபாய், கன்னடத் திரையுலகின் முதல் கதாநாயகியாகக் கருதப்படுகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஏறக்குறைய 1,000 படங்களில் நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆருடன் ‘அடிமைப் பெண்’ உள்ளிட்டப் படங்களில் நடித்தவர். மதுரையில் சிந்தாமணி தியேட்டரில் நடந்த ‘அடிமைப் பெண்’ வெற்றி விழாவில், பாண்டியன் ஓட்டலில் இருந்து சிந்தாமணி தியேட்டருக்கு திறந்த வேனில் மக்கள் திலகம் வந்தார்.

தியேட்டரில் ரசிகர்கள் முன் தோன்றினார். சிந்தாமணி தியேட்டரில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. கண்ணாடி போட்டிருப்பவர் சிந்தாமணி தியேட்டர் உரிமையாளர்.

Comments (0)
Add Comment