பொன்மனச் செம்மல் – எம்.ஜி.ஆருக்கு பொருத்தமான பெயர்!

பேசும் படம்:

இந்தியில் 1973-ம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘சஞ்ஜீர்’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

அமிதாப்பச்சனுடன், ஜெய பாதுரி, பிரான் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை பிரகாஷ் மெஹ்ரா இயக்கி இருந்தார்.

ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால், இந்தப் படத்தைத் தமிழில் இயக்க நினைத்தார் ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியம்.

இந்தப் படத்திற்கு ‘சிரித்து வாழ வேண்டும்’ என்று பெயரிடப்பட்டு, எம்.ஜி.ஆர்., நடிப்பில் 1974 ஆம் ஆண்டு வெளியானது. 

எம்.ஜி.ஆர், லதா, எம்.என். நம்பியார், ஆர்.எஸ். மனோகர், தேங்காய் சீனிவாசன் உட்பட பலர் நடித்த இந்தப் படத்திற்கு ஆர்.கே. சண்முகம் வசனம் எழுதியிருந்தார். உதயம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பின் போது, ஜெமினி ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.மணி,  நீதிபதி மு.முகமது இஸ்மாயில் மற்றும் இயக்குநர் ஸ்ரீதர் ஆகியோர் உள்ளனர்.

குறிப்பு: இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் தொடக்க வரி பொன்மனச் செம்மல் எனத் தொடங்கும்.

Comments (0)
Add Comment