அன்பின் மிகுதியால் ஆரத்தழுவிய நடிகர் திலகம்!

பேசும் படம்:

டி.எஸ்.பாலையா – மறக்க முடியாத பிறவிக் கலைஞன், காதநாயகன், வில்லன், கவுரவத் தோற்றம், நகைச்சுவை என்று பட உலகில் ஜொலித்தவர். அவருடைய திறமையை சொல்ல வார்த்தைகள் இல்லை.

டி.எஸ்.பாலையா நடித்த தில்லானா மோகனாம்பாள், பாமா விஜயம், திருவிளையாடல், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட பல படங்கள் இன்றும் ரசிகர்களால் விரும்பி பார்க்கப் படுவதாகும்.

குணச்சித்திரம், நகைச்சுவை, நயவஞ்சகம், பாமரத்தனம், மேதாவித்தனம், ஏழ்மை, பணக்காரத்தனம் போன்ற எந்தக் கதாபாத்திரமானாலும் தன்னுடைய இயல்பான அலட்டலில்லாத நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காடச் செய்த நடிகர்.

தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல் உள்ளிட்ட படங்களில் சிவாஜியுடன் நடித்த பின் இருவரும் நெருங்கிய நண்பர்களாயினர்.

குறிப்பு: சென்னை சங்கீத நாடக சங்கம் சார்பில் பரிசளிப்பு விழா நடைபெற்றபோது, தங்கப் பதக்கம் பெற்ற டி.எஸ்.பாலையாவை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெருமகிழ்ச்சியோடு தழுவிக்கொள்கிறார்.

– நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment