படைப்பை முன்னிறுத்திய சிவாஜி என்னும் ஆளுமை!

பேசும் படம்:

1958-ல் வெளிவந்த ‘சம்பூர்ண ராமாயணம்’ திரைப்படத்தில் என்.டி. ராமராவ் ராமனாகவும், சீதையாக பத்மினியும், பரதனாக சிவாஜியும், டி.கே.பகவதி ராவணனாகவும் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

‘சம்பூர்ண ராமாயணம்’ படப்பிடிப்பின்போது படக்குழுவினர் எடுத்த புகைப்படம் இது.

படைப்பை முன்னே நிறுத்தி சிவாஜி எனும் ஆளுமை பரதனாக பின்னே நின்றார். ‘சக்கரவர்த்தி திருமகன்’ என ராமாயணத்தை எழுதிய ராஜாஜி, ‘பரதனைக் கண்டேன்’ எனப் படத்தைப் பெரிதும் பாராட்டினார்.

கதை, வசனம் எழுதியவர் ஏ.பி.நாகராஜன். நாடகத் துறையிலிருந்து திரைப்படத் துறைக்கு வந்தவர். சிவாஜியின் நாடகக் கால நண்பர். நடிகர், கதையாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மைக் கொண்டவர்.

Comments (0)
Add Comment