நகைச்சுவை இழையோடிய பேச்சு பாப்பையாவின் தனி அடையாளம்!

பேசும் படம் :

மதுரை மணம் மணக்க மேடைகளில் பேசும் பட்டிமன்ற நாயகரான சாலமன் பாப்பையாவுக்கு இளம்வயதில் பிடித்த பாடகர் பி.யு.சின்னப்பா. அவரை மாதிரியே பாடுவதில் தனி ஈடுபாடு.

லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் படித்த அவருக்கு ஓவியம் வரைவதிலும் தேர்ச்சி. படிக்கும்போதே டியூசன் சென்டரை நடத்திய பாப்பையா துவக்க காலத்தில் நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.

ஒரு சில திரைப்படங்களில் அவர் நடித்தும் இருக்கிறார். அவரது நகைச்சுவைக் காட்சிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது. பின்னாளில் நகைச்சுவை இழையோடிய பேச்சு அவருடைய தனி அடையாளம் ஆனது. “வாங்க.. பழகுங்க..” திரை வசனம் மறக்குமா?

ஆரம்ப காலத்தில் மேடைகளில் படு ஆவேசமாகப் பேசி வந்த பாப்பையாவுக்குப் பிடித்தமானவர்கள் திரு.வி.க.வும், பாரதியும்.

அப்படியொரு மேடையில் ஆவேசத்தின் உச்சியில் பாப்பையா இருந்தபோது ஒரு ‘க்ளிக்’.

Comments (0)
Add Comment