பேசும் படம்:
பாதாள பைரவி. 1951 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த திரைப்படமாகும்.
கே.வி.ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என்.டி. ராமராவ், எஸ்.வி. ரங்கராவ், கே.மாலதி, ரேலங்கி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படத்தின் இசையமைப்பாளர் கண்டசாலா. இப்படம் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு மொழியில் 15 மார்ச் 1951-யில் வெளியான இப்படம் வியாபார ரீதியாக மாபெரும் வெற்றி அடைந்து,
200 நாட்களுக்கு ஓடிய முதல் தெலுங்குப் படம் என்ற சாதனையையும் செய்தது. தஞ்சை இராமையாதாஸ் தமிழ்ப் படத்திற்கான கதை வசனம் எழுதியிருந்தார்.
குறிப்பு: இந்தப் படம் இலங்கை யாழ்ப்பாணம் மனோகரா திரையில் மறுவெளியீடாக வந்தபோது வெளியிடப்பட்ட பத்திரிகை விளம்பரம் இது. இதில் ஆந்திர முதலமைச்சர் என்றே என்.டி.ராமாராவை அடையாளப்படுத்தியுள்ளது.