நடித்துக் காட்டி காட்சியை விளக்குவதில் வல்லவர் பாரதிராஜா!

பாரதிராஜாவின் இயக்கத்தில் 1985ம் ஆண்டு வெளிவந்த ஒரு கைதிதியின் டைரி திரைப்படத்தில் கமல்ஹாசன், ராதா, ரேவதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் கதையை கே.பாக்யராஜ் எழுதியுள்ளார். இப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுத, இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படம் 150 நாட்கள் மேல் ஓடி மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

இந்தி மொழியிலும் வெளியான இந்தப் படத்தை, கே. பாக்யராஜ் இயக்கினார். இந்தியில் அமிதாப் பச்சன், ஜெயபிரதா, ஸ்ரீதேவி நடிப்பில் “ஆக்கிரி ராக்ஷ்ரா” எனும் பெயரில் படமாக்கப்பட்டது. இப்படம் தெலுங்கு மொழியில் ‘கைதி வீட்டா’ எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளி வந்தது.

ஒரு கைதியின் டைரி படப்பிடிப்பின்போது ஊட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இதில் நடிகை ராதா, கமல் ஆகியோருக்கு பாடல் காட்சியை  விளக்குகிறார்  இயக்குநர் பாரதி ராஜா.

புகைப்படம் உதவி: ஞானம்.

Comments (0)
Add Comment