அதிரடித் திரைப்படத்தின் ஆரம்பப் புள்ளி!

ரஜினி நடிப்பில் வெளியான படங்களில் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் ஒன்று ‘அண்ணாமலை’.

“மலை டா அண்ணாமலை…” போன்ற வசனங்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினியுடன் குஷ்பு, சரத் பாபு, மனோரமா, ராதா ரவி என பலர் நடிக்க, தேவா இசையமைத்திருந்தார்.

தேவாவின் இசையில் பாடல்கள் செம ஹிட். “வந்தேண்டா பால்காரன்” பாடல் இப்போது ஒளிபரப்பினாலும் பட்டிதொட்டி எங்கும் கலக்கும்.

1992ம் ஆண்டு ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் அப்போது ரூ. 17 கோடி வரை வசூலித்து Industry Hit படமாக அமைந்தது.

குறிப்பு: ‘அண்ணாமலை’ படத் துவக்க விழாவின்போது, படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், படத்தின் நாயகன் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் தேவா, தயாரிப்பாளரும் இயக்குநருமான பிரமிட் நடராஜன், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இவர்களுடன் படக்குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

 
Comments (0)
Add Comment