பேசும் படம்:
நடிகர் வினு சக்ரவர்த்தியும் நடிகை விஜயசந்திரிகாவும் மீன் வியாபாரம் செய்யும் தம்பதிகள் போல வாசுகி வார இதழுக்கு புகைப்படம் எடுக்க விரும்பினேன்.
காலை 8 மணிக்கு, இருவரையும் வடபழனி மீன் மார்க்கெட்டிற்கு வரவேண்டும் என தொலைபேசியில் தெரிவித்தேன்.
வரும்போதே சொந்த உடைகளையே இருவரும் அணிந்து வந்தனர். அசல் மீன்மார்க்கெட்டில் வேலை செய்பவர்களாகவே அந்த உடையில் தெரிந்தனர்.
லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி ஷூட்டிங்கில் நடிப்பவர்கள்தான் இருவரும். ஆனால், மிக எளிமையாக, எந்த பந்தாவும் இல்லாமல், மீன் மார்க்கெட் நாற்றத்திற்கு நடுவே, தரையில் அமர்ந்து, வஞ்சிரமீனை வெட்ட ஆயத்தமானார் வினுசக்கரவர்த்தி. விஜய சந்திரிகாவும் அவருக்கு உதவினார்.
பத்திரிகையின் அட்டைப்படத்திற்காகத் தானே என்றில்லாமல் நிஜமாகவே மீன் வியாபாரிகளாக மாறிப்போனார்கள் இருவரும். அவர்களுடைய ஒத்துழைப்பை வாழ்நாளில் மறக்க முடியாது.
பத்திரிகையாளர்களுடன் நட்பு பாராட்டி, ஒத்துழைப்புக் கொடுக்கும் கலைஞர்களை இப்போது அரிதாகவேப் பார்க்க முடிகிறது.
– நன்றி: ராஜேந்திரன், பத்திரிகையாளர், புகைப்படக் கலைஞர்.