புகைப்படத்திற்கும் விஜய் கட்சி துவங்கியதற்கும் என்ன தொடர்பு?

பேசும் படம்:

‘கல்யாணசுந்தரம்’ போட்டோ செஷனோடு முடிந்து(கை)விட்டப் படம்.
 
ஆனால், பூஜையன்று 10 ஜோடிகளுக்கு என் சொந்தச் செலவில் தாலி முதல் மெட்டி வரை, தட்டுமுட்டு சாமான் பெட்டி படுக்கை என சீர் செய்து சினிமா பூஜைகளை பிரயோஜனமாகவும் செய்யலாம் என தொடங்கி வைத்தேன்.
 
அதுவே பின் தொடரப்பட்டது பலரால். பின்னொரு காலத்தில் தளபதி விஜய் என் தலைமையில் 16 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்தார்.
 
“இதன் மூலம் புண்ணியம் சேர்த்துக் கொள்ளும் விஜய் தான் மணமக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்” என அப்போது புரட்டிப் பேசினேன்.
 
அப்படிப்பட்ட நல்ல காரியங்கள் எல்லாம் சேர்ந்து தான் அவருக்கு கட்சித் துவங்கும் தைரியம் வந்தது.
 
யாரோ ஒருவர் இந்த போட்டோவை அனுப்பி என பழைய நினைவை கீறியதால்…
 
– நடிகர் பார்த்திபன்
 
Comments (0)
Add Comment