பிருத்வி இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் ராமம் ராகவம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பிருத்வி போலவரபு தயாரிப்பில், பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி, இருமொழி திரைப்படமாக இயக்குவதோடு சமுத்திரக்கனியோடு இணைந்து நடித்துள்ளார்.
தந்தை – மகன் உறவு கொண்டப் படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம், ஹைதராபாத், சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
தற்போது இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
– தேஜேஷ்