ராம்சரண் பிறந்தநாளில் வெளியான ‘பெடி’ பர்ஸ்ட் லுக்!

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் – ஜான்வி கபூர் – புச்சிபாபு சனா – ஏ.ஆர். ரஹ்மான் – வெங்கட சதீஷ் கிலாரு – விருத்தி சினிமாஸ் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் – சுகுமார் ரைட்டிங்ஸ் – ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘பெடி (PEDDI)’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.‌

தேசிய விருது பெற்ற ‘உப்பென்னா’ படத்தின் இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில், ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் நடிக்கிறார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘குளோபல் ஸ்டார்’ ராம் சரணின் 16-வது படமாக தயாராகும் இந்தத் திரைப்படத்தில் இணைந்திருக்கும் இந்தக் கூட்டணி, வெள்ளித்திரையில் புயலைக் கிளப்பத் தயாராக உள்ளனர்.

ராம்சரணுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்த படக்குழுவினர், இப்படத்தின் டைட்டிலை பெடி (PEDDI) என்று வெளியிட்டுள்ளனர்.

துளையிடும் கண்கள் – கலைந்த கூந்தல் – சீர் படுத்தாத தாடி மற்றும் பிரத்யேக மூக்கு வளையத்துடன் அசைக்க முடியாத ஆதிக்கத்தினை அந்தக் கதாபாத்திரம் வெளிப்படுத்துகிறது.

இதனுடன் இணைந்து வெளியிடப்பட்ட இரண்டாவது போஸ்டரில், அவர் ஒரு பழைய கிரிக்கெட் மட்டையை ஏந்தி இருப்பதை காண முடிகிறது.

பின்னணியில் வெள்ளை விளக்குகளால் ஒளிரும் ஒரு கிராமப்புற அரங்கமும் இடம்‌பிடித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளைப் கவனித்துக் கொள்கிறார். இப்படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக அவினாஷ் கொல்லாவும் இணைந்திருக்கிறார்.

பெடி (PEDDI) பற்றிய பரபரப்பு ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் நிலையில் வெளியிடப்பட்டிருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் – படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது.

Comments (0)
Add Comment