ராஜமவுலி படத்தில் காசியை சித்தரிக்கும் அரங்கம்!

தெலுங்குத் தேச சினிமா உலகின் பிரமாண்ட இயக்குநரான எஸ்.எஸ். ராஜமவுலி, கடைசியாக ஆர்.ஆர்.ஆர் படத்தை டைரக்டு செய்திருந்தார். நாட்டு .. நாட்டுப் பாடலுக்கு ஆஸ்கர் விருதைப் பெற்றது, இந்தப் படம்.

சில ஆண்டுகள் ஓய்வு எடுத்த ராஜமவுலி, அடுத்து தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

இப்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா வில்லி கேரக்டரில் நடிக்கிறார்.

இந்த ‘பான் இந்தியா’ படத்துக்குத் தலைப்பு வைக்கவில்லை.

தற்காலிகமாக ‘SSMB 29′ என பெயர் சூட்டப்பட்டு ‘ஷுட்டிங்’ நடந்து வருகிறது. ரூ.500 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகிறது.

இப்போது ஒடிசாவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்காக ஐதராபாத்தில் உள்ள அலுமினியம் பேக்டரி வளாகத்தில் காசி நகரை போன்று அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவிலிருந்து படக்குழு திரும்பியதும் இந்த ‘செட்’ டில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்த அரங்கில் 600 துணை நடிகர்கள் பங்கேற்கும் முக்கியக் காட்சிப் படம் ஆக்கப்படுகிறது.

  • பாப்பாங்குளம் பாரதி
Comments (0)
Add Comment