“அரசியலில் ஈடுபடலாமா?” என்று நடிகர் முத்துராமன் (25.11.1976) குமுதம் இதழில் – வாசகர்களிடம் கேட்டிருந்த போது – பெரும்பாலான வாசகர்கள் அளித்த பதில்.
“வேண்டாம்”
அதிலும் சென்னையைச் சேர்ந்த எம். ஆர். குமார் என்கிற வாசகர் எழுதியிருந்த பதில்:
“உங்களுக்குக்கும் மேலான மூத்த நடிகர்கள் சேர்ந்து எங்களைக் குழப்புவதே போதும். நீங்களும் கூடச் சேர்ந்து எங்களைச் சோதிக்காதீர்கள்.. (அரசியலின் கசப்பு அனுபவங்களுக்கு அணுகுக; ஸ்ரீகாந்த், ரவிச்சந்திரன்)”
வாசகர்களின் குரலுக்கு மதிப்புக் கொடுத்து நேரடி அரசியலுக்குள் முத்துராமன் இறங்கவில்லை!