சமந்தா வெளியிட்ட போட்டோ: நெட்டிசன்கள் எதிர்ப்பு!

நடிகை சமந்தா இப்போது விடுதலைப் பறவை.

நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின்னர் சமந்தாவை கேள்வி கேட்பார் இல்லை. தென்னிந்திpய படவுலகைக் கலக்கியவர், பாலிவுட்டிலும் பிசியாக இருக்கிறார்.

இப்போது சமந்தா, ‘ரக்த் ப்ரஹ்மண்ட்: தி ப்ளடி கிங்டம்’ என்ற இந்தி வெப்தொடரில் நடித்து வருகிறார்.

அண்மையில் ‘சுபம்’ என்ற தெலுங்கு படத்தைத் தயாரித்து, கவுரவத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. லாபம் இல்லையென்றாலும் பெரிய அளவில் அவருக்கு நஷ்டம் ஏற்படவில்லை.

இதனை அடுத்து ‘மா இன்டி பங்காரம்’ என்ற படத்தைத் தயாரித்து அதில் நாயகியாக நடித்து வருகிறார் சமந்தா.

நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு சினிமா, வெப் தொடர்களில் தாராளமாக கவர்ச்சியில் கலக்கும் அவர், பொது நிகழ்ச்சிகளுக்கும் கிளாமராகவே வருகிறார்.

அண்மையில் சமந்தா விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர், அணிந்திருந்த ஆடை குறித்து கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. வலை போன்ற அமைப்பு கொண்ட ஆடையை அவர் அணிந்திருந்தார். விருது நிகழ்ச்சி முடிந்ததும் தனியாக போட்டோஷூட் நடத்தினார்.

அந்த போட்டாக்களைப் பார்த்த நெட்டிசன்கள் ‘இப்படி எல்லாமா போஸ் கொடுப்பது?, கிளாமர் காட்டுவதற்கு ஒரு அளவு இல்லையா? என சமந்தாவை வறுத்து எடுத்த வண்ணம் உள்ளனர்.

ஆனால், இதற்கெல்லாம் சமந்தா கவலைப்படவில்லை. இதுவும் தனக்குக் கிடைத்த விளம்பரமாகவ பார்க்கிறார்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment