ஒரு பாடலுக்கு 64 டியூன்கள் போட்ட இளையராஜா!

நடிகர், இயக்குநர் பாண்டியராஜன் நெகிழ்ச்சி
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வந்தவர் பாண்டியராஜன். இவர் படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் நடிக்கவும் செய்தார்.
 
கடந்த 1985-ம் ஆண்டு வெளியான ‘ஆண்பாவம்’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவில் தனக்கான இடத்தைப் பிடித்தார்.
 
தொடர்ந்து, ‘கன்னிராசி’, ‘கோபாலா கோபாலா’, ‘டபுஸ்’ போன்ற பல்வேறு படங்களை இயக்கி நடித்தும் உள்ளார்.
 
தமிழ் சினிமாவில் கதாநாயகன், சிறப்புத் தோற்றம், குணச்சித்திர நடிகர் என 80-க்கும் அதிகமான படங்களில் பாண்டியராஜன் நடித்துள்ளார்.
 
இவர் படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். கே.பாக்யராஜின் உதவி இயக்குநராக இருந்த பாண்டியராஜனின் படங்கள் பெரும்பாலும் நகைச்சுவையாக மட்டும் இல்லாமல் அன்றாட வாழ்க்கையின் சிக்கல்கள் மற்றும் உறவுகளின் சிக்கல்களை எடுத்துரைப்பதாக இருந்தது.
 
இந்நிலையில் இயக்குநர் பாண்டியராஜன், இசையமைப்பாளர் இளையராஜா குறித்து மனம் திறந்துள்ளார்.
 
அவர் பேசியதாவது, “ஆண்பாவம் திரைப்படத்தில் நடிகை சீதாவை அறிமுகம் செய்கிறோம். மாப்பிள்ளை வந்துவிட்டார் என்றதும் சீதா ஓடி வருவது போன்று ஒரு சீன் இருக்கும்.
 
அந்த சீனை ஒரு ஏழு, எட்டு தடவை எடுத்தோம். ரொம்ப நேரம் காண்பித்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று மூன்று ஷாட் மட்டுமே வைத்தோம்.
 
அதற்கு இளையராஜா சார் மிகவும் அருமையாக இசையமைத்திருப்பார். நடிப்பு ஒரு 25 சதவிகிதம் இருந்தால் போதும் மீதியை இளையராஜா சார் பார்த்துக் கொள்வார்.
 
அதேபோன்று படத்தை ஒரு 60 சதவிகிதம் எடுத்துவிட்டு நம்பி ராஜா சாரிடம் கொண்டு கொடுக்கலாம்” என்றார். 80 காலக்கட்டத்தில் இளையராஜா பாடல்கள் ஒலிக்காத இடங்களே கிடையாது. எங்கு பார்த்தாலும் இளையராஜா இசையாகத் தான் இருக்கும்.
 
பெரும்பாலும், இயக்குநர்கள் பலரும் தங்கள் திரைப்படங்களுக்கு இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என்று அவர் வீட்டு வாசலில் காத்திருந்த நாட்களும் இருக்கின்றன.  ஒரு பாடலுக்கு 64 டியூன்கள் போடும் திறமையும் இளையராஜா ஒருவருக்கு மட்டுமே உள்ளது.
 
இசைத்துறையில் பல சாதனைகளைப் படைத்த இசையமைப்பாளர் இளையராஜா அன்று முதல் இன்று வரை ரசிகர்கள் விரும்பும் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார்.
 
– நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
Comments (0)
Add Comment