மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகிறது ‘அதர்ஸ்’!

புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘அதர்ஸ்’.

கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில், மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார்.

அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்தில் ஜிப்ரான் இசையமைப்பையும், ராமர் படத்தொகுப்பையும், பிரதீப் சண்டை காட்சிகளையும், சந்தோஷ் நடன அமைப்பையும் கையாண்டிருக்கின்றனர்.

இதில் முக்கிய கதபாத்திரங்களில் ‘முண்டாசுபட்டி’ ராமதாஸ், ‘நண்டு’ ஜகன், ஹரிஷ் பெரோடி, வினோத் சாகர், இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படம் நவம்பர் 7ம் தேதியன்று வெளியாகவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Comments (0)
Add Comment