‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் சைலேஷ் கொலானு – வால் போஸ்டர் சினிமா – யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் – கூட்டணியில் உருவான ஹிட் : தி தேர்ட் கேஸ்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தத் திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. நானி ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட் பட வரிசையில் வேகமாக பயணிப்பதால் மட்டுமல்ல, கிளிம்ப்ஸ், டீசர், பாடல்கள் மற்றும் விளம்பரப்படுத்தும் ஸ்டைலுக்கு கூட பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இயக்குநர் டாக்டர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்த் திபிர்னேனி, நானியின் சொந்தப் பட நிறுவனமான யுனானிமஸ் புரொடக்ஷனுடன் இணைந்து தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
நானி ஏற்றிருக்கும் கதாபாத்திரமான அர்ஜுன் சர்க்காருக்கு கடுமையான தொனியை அமைக்கும் வகையில், ஒரு இறுக்கமான காட்சியுடன் முன்னோட்டம் தொடங்குகிறது. நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி தோன்றுகிறார்.
உணர்வு ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் சிறந்த, ஒரு கவர்ச்சிகரமான, ரசிகர்களை இருக்கையில் நுனியில் அமர வைக்கும் கதையை வடிவமைத்துள்ளார் இயக்குநர் சைலேஷ் கொலானு.
‘ஹிட்: தி தேர்ட் கேஸ் ‘ படத்தின் மூலம் அவர் கிரைம் திரில்லர் படங்களில் தேர்ச்சி பெற்றவர் எனும் தனது நற்பெயரை உறுதிப்படுத்துகிறார் என்கிறார்கள் படக்குழுவினர்.
படத்தொகுப்பு – கார்த்திகா ஸ்ரீனிவாஸ். தயாரிப்பு வடிவமைப்பாளர் ஸ்ரீ நாகேந்திர தங்காலா. பின்னணி இசை – மிக்கி ஜே. மேயர்.
இந்த முன்னோட்டம், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், படம் மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.