35 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் புராண படம்!

தமிழில் ஆரம்பகால சினிமாக்கள் புராணக்கதைகளை தழுவியே உருவானது. சில ஆண்டுகளுக்கு பிறகு பாதை மாறியது. குடும்ப உறவுகளை சொல்லும் சமூக படங்கள், கதைக்களமாகின.

அந்த காலகட்டத்திலும், ஏ.பி. நாகராஜன், கே.எஸ்.கோபால கிருஷ்ணன் போன்றோர், புராண கதைகளை மையமாக்கி, பிரமாண்ட படங்களை கொடுத்து, அமோக வெற்றி பெற வைத்தனர்.

இவற்றில் திருவிளையாடல், ஆதி பராசக்தி ஆகியவை முக்கியமான சினிமாக்கள்.

இந்த நிலையில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து ஒரு சினிமா உருவாகியுள்ளது. படத்துக்கு “ராகு கேது” என டைட்டில்.

இந்த படம் ஆகஸ்ட் 8ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி சிவனாகவும், கஸ்தூரி துர்கையாகவும், விக்னேஷ் மகாவிஷ்ணுவாகவும் நடித்துள்ளனர்.

– பாப்பாங்குளம் பாரதி

Comments (0)
Add Comment