நான் பதினோராம் வகுப்புப் படிக்கும்போது பள்ளியில் இருந்து சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. மதுரை – கொடைக்கானல் – தேக்கடி செல்ல முடிவு செய்யப்பட்டது. அதற்கு கட்டணமாக 35 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
அப்போது கொஞ்சமும் வசதியில்லாத ஒரு மாணவரும் எங்களுடன் வந்தார்.
அவர் ஒரு நடிகருக்குத் தன் ஏழ்மை நிலையைச் சொல்லி உதவி கேட்டுக் கடிதம் எழுதியிருந்தார்.
அந்த மாணவருக்கும் கடைசி நாளன்று மணி ஆர்டரில் நடிகரின் தனிச் செயலாளர் குமாரசாமி என்பவர் கையெழுத்திட்டு ஐம்பது ரூபாய் வந்தது.
வகுப்பே வாய்பிளந்து நின்றது. அந்த மாணவருக்கு எம்.ஜி.ராமச்சந்திரன், 160, லாயிட்ஸ் ரோடு, சென்னை-14 என்கிற முகவரியைக் கொடுத்தது நான்தான்.