மம்முட்டி, மோகன்லால் படத்தை பீட் செய்த ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’!

மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் படங்கள் செய்யாத வசூல் சாதனையை ஒரு சின்ன பட்ஜெட் படம் செய்திருப்பதைப் பார்த்து மலையாள திரை உலகம் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம் கமல்ஹாசனின்`குணா’ படத்தை தழுவியது.

இந்தப் படத்தின் வசூல் 175 கோடி செய்துள்ள நிலையில் தற்போது 200 கோடி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் படங்கள் செய்யாத வசூல் சாதனையை வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட அறிமுக நடிகர்கள் நடித்த படம் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு படத்தின் வெற்றிக்கு நல்ல கதை இருந்தால் போதும் என்பது 100% நிரூபித்த படம் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்று திரையுலகினர் கூறி வருகின்றனர்.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment