ஐமேக்ஸில் வெளியாகும் முதல் மலையாளப் படம்!

நடிகரும் இயக்குநருமான பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, மோகன் லால் நடிப்பில் பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள படம் ‘எம்புரான்’.

இந்தப் படத்தில் அம்பிமன்யு சிங், ஆண்ட்ரியா டிவடார், சூரஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய்குமார், பிஜூ சந்தோஷ், ஃபாசில், சச்சின் கேடேகர், நைலா உஷா, ஜிஜூ ஜான், நந்து, சிவாஜி குருவாயூர், மணிக்குட்டன், அநீஷ் ஜி. மேனன், ஷிவதா, அலெக்ஸ் ஓநெல், எரிக் எபோனே, மிகைல் நொவிகோவ், கார்த்திகேயா தேவ் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் இணைந்து நடித்துள்ளனர்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வெளியாகும் ‘எம்புரான்’, இந்தியத் திரையுலகில் முக்கியமான படமாக, எதிரப்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

மோகன்லாலுக்கு லூசிஃபர் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால் எம்புரான் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சிறப்பு வாய்ந்த எம்புரான் திட்டமிட்டபடி மார்ச் 27 அன்று திரைக்கு வரும் என்று இயக்குநர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.

மோகன்லால் நடித்த படங்களிலேயே இதுவே மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐமேக்ஸில் வெளியாவது குறித்து பேசிய மோகன்லால், ஐமேக்ஸில் வெளியாகும் முதல் மலையாளப் படமாக எம்புரான் திரைப்படம் இருப்பது மிகப்பெரிய கர்வத்தைக் கொடுக்கிறது.

ஐமேக்ஸுக்கும் மலையாள சினிமாவுக்கும் உள்ள தொடர்பு இதன்மூலம் நீண்ட, சிறப்பு வாய்ந்த தொடர்பாக நீடிக்குமென நம்புகிறேன்.

இந்தப் படத்தை மார்ச் 27 முதல் உலகம் முழுவதும் ஐமேக்ஸில் கண்டு களியுங்கள் என்றார்.

Comments (0)
Add Comment