மது பாலகிருஷ்ணன்: மயக்கும் குரலுக்குச் சொந்தக்காரர்!

மது பாலகிருஷ்ணன் கேரளத்தைச் சேர்ந்த, கொச்சி மாமன்னரின் தலைநகராக இருந்த திருப்புனித்துறையில் பிறந்தவர்.

சென்னையில் உள்ள இந்திய இசை மற்றும் கலை அகாடமியில் இசையில் பட்டம் பெற்று, அனைத்திந்திய வானொலி மற்றும் தூர்தர்சனில் தரப்படுத்தப்பட்ட கலைஞராக பணியாற்றியவர்.

மலையாளம், தெலுங்கு, தமிழ், மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பாடல்கள் பாடியுள்ள மது பாலகிருஷ்ணன், கே.ஜே.யேசுதாஸ், ஆஷா போஸ்லே, ஜெயச்சந்திரன், எம்.ஜி.ஸ்ரீகுமார், கே.எஸ்.சித்ரா, சுஜாதா மோகன், மாதுரி மற்றும் பி.சுசீலா போன்ற பிரபலமான பாடகர்களுடன் பணியாற்றியவர்.

2002 ஆம் ஆண்டு “வால்கண்ணாடி” என்ற மலையாளத் திரைப்படத்தில் இவரது “அம்மே அம்மே” என்ற பாடலுக்கு கேரள அரசு மாநில விருது கிடைத்த பிறகு புகழ்பெறத் துவங்கினார்.

இதனைத் தொடர்ந்து 90 மலையாளம், 65 கன்னடம், 45 தெலுங்கு மற்றும் 65 தமிழ்த் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.

சில பாடல்கள் கேட்ட உடனே வரிகளாலும் இசையாலும் குரலுக்காகவும் எத்துனை முறையேனும் கேக்கலாம்.

வசீகரிக்கும் வகையிலும் மிகவும் பிரபலமாகாவிட்டாலும் பாடல் கேட்க மென்மையாக அருமையாக இருக்கிறது.

‘மந்திரப் புன்னகை’, படத்தில் இடம்பெற்ற ‘மேகம் வந்து போகும்’ பாடல் வித்யாசாகரின் இசையில் மது பாலகிருஷ்ணனின் குரல் மெருகேற்றியது என்றே சொல்லலாம்.

இதேபோல், அபியும் நானும் திரைப்படத்தில்

“தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா

என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே”

பாடலில் ஒவ்வொரு தந்தையும் தாயாகவே மாறும் அழகிய உணர்வை ஆழமான வரிகளில் மிக அழகாக பாடியிருப்பார் மது பாலகிருஷ்ணன்.

2010-ம் ஆண்டு இளையராஜா இசையில் ‘நான் கடவுள்’ திரைப்படத்திற்காக இவர் பாடிய “பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்” என்ற பாட்டு மிர்ச்சி இசை விருது பெற்றுள்ளது.

இந்த பச்சைக் கிளிக்கொரு செவ்வந்தி பூவில் தொட்டிலை கட்டி வைத்தேன்… என்ற பாடலை அழகிய குரலில் பாடி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த பாடகர் மது பாலகிருஷ்ணன், “கொஞ்சநேரம் கொஞ்சும் நேரம்”, “டிங் டாங் கோயில் மணி”, “எதிலும் இங்கு இருப்பான்”, “கனா கண்டேனடி தோழி”, “வந்தே மாதரம்” உள்ளிட்ட மெகா ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார்.

இன்னும் எண்ணற்ற பாடல்களை மது பாலகிருஷ்ணன் தந்துகொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் அவரது ரசிகர்களின் தீராத ஆசை.

  • – யாழினி ராஜ்
Comments (0)
Add Comment