சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகளைக் குவித்த ‘லாக் டவுன்’!

அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘லாக் டவுன்’ திரைப்படம் – கோவாவில் நடைபெறும் 56-வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், ஜி.கே.எம் தமிழ்குமரன் தலைமையில், இப்படத்திற்கு சர்வதேச திரை ஆர்வலர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

‘லாக் டவுன்’ திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரனுடன் சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன், பிரியா வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு படத்தொகுப்பாளராக சாபு ஜோசப், இசையமைப்பாளராக என்.ஆர்.ரகுநந்தன் – சித்தார்த் விபின் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

லாக் டவுன் காலகட்டத்தில் மக்களுக்கு ஏற்பட்ட உணர்வு மற்றும் உளவியல் ரீதியிலான தாக்கங்களை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

இந்த நிலையில், தற்போது கோவாவில் நடைபெற்று வரும் 56-ஆவது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் சர்வதேச பார்வையாளர்களுக்கான பிரத்யேக திரையிடலில் ‘லாக் டவுன்’ திரையிடப்பட்டது.

அந்த அரங்கம் முழுவதும் பார்வையாளர்களால் நிரம்பி இருந்தது.

இப்படத்தை பார்வையிட்ட சர்வதேச பார்வையாளர்கள் – விருந்தினர்கள் – விழாக் குழுவினர் – திரை ஆர்வலர்கள் – என அனைவரும் படத்திற்கும் படக்குழுவினருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

இதற்கு படக்குழுவினர் தங்களது நன்றியைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்தப் படம் டிசம்பர் 5-ல் திரையரங்கில் வெளியாகவுள்ளது.

Comments (0)
Add Comment