2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘எம்புரான்’ தயாராகியுள்ளது.
முதல் பாகத்தை இயக்கிய பிரித்விராஜ், இதனையும் இயக்கியுள்ளார். அதில் நடித்த மோகன்லால், எம்புரானிலும் நாயகனாகத் தோன்றி இருக்கிறார்.
மஞ்சு வாரியார், டொவினோ தாமஸ் உள்ளிட்டோரும் முக்கியக் கேரக்டர்களில் நடித்துள்ளனர். மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் ‘டப்’ செய்யப்பட்டு, உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் ஆகிறது ‘எம்புரான்’.
படத்துக்குப் பெரிய அளவில் விளம்பரம் செய்துள்ளதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மலையாளப் படங்களுக்குத் தென் இந்தியாவில் இருக்கும் அளவுக்கு மும்பை உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் பெரிய வரவேற்பு கிடைப்பதில்லை.
ஆனால் ‘எம்புரான்’ வட இந்தியாவிலும் சாதனை நிகழ்த்தும் என நம்புகிறது பட நிறுவனம்.
வட இந்தியாவின் முக்கிய ஊர்களிலும். எம்புரான் இன்று ரிலீஸ் ஆகும் நிலையில் சல்மான் கான் நடித்துள்ள ‘சிக்கந்தர்’ என்ற இந்தித் திரைப்படம் வரும் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. இன்னும் மூன்று நாட்கள் எம்புரானுக்கு அங்குப் பிரச்சினை இல்லை.
சிக்கந்தர் படம் ஓரளவு நன்றாக இருந்தாலும், எம்புரானுக்கு வட இந்தியாவில் வசூல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.
தமிழ்நாட்டிலும், இதே போன்ற சிக்கல் எம்புரானுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் எம்புரான், ரிலீஸ் அகும் நிலையில் ‘சீயான்’ விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ படமும் இன்றுதான் வெளிவருகிறது.
தமிழ் ரசிகர்கள் எந்தப் படத்துக்கு முன்னுரிமை அளிப்பார்கள் என்பது தெரியவில்லை.
மலையாள சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் எம்புரான் திரைப்படம் கேரளாவில் மட்டும் 746 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் ‘புஷ்பா-2’ திரைப்பட சிறப்பு காட்சியின்போது, தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பெண் உயிர் இழந்தார்.
அதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதால் எம்புரான் திரையிடப்பட்டுள்ள அனைத்து தியேட்டர்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
– பாப்பாங்குளம் பாரதி.