எந்தப் பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது!

இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் பேச்சு

‘கொஞ்சநாள் பொறு தலைவா’ டிரைய்லர் வெளியீட்டு விழா!

பிரபல இயக்குநர்களான சக்தி சிதம்பரம், ‘உளவுத்துறை’ ரமேஷ் செல்வன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில், S. முருகன் தயாரிப்பில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் ‘கொஞ்ச நாள் பொறு தலைவா’.

நாயகன் நாயகியின் லிப்லாக் ரொமான்ஸுடன் காதல், நகைச்சுவை கலந்து அனைவரும் ரசிக்கும் வகையில், முழுமையான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் நாயகன், நாயகியாக நிஷாந்த் ரூஷோ, காயத்ரிஷான் நடித்துள்ளனர். மேலும் முக்கியக் கதாபாத்திரங்களில், பால சரவணன், லொள்ளு சபா மாறன், கும்கி அஷ்வின், சூப்பர் குட் சுப்ரமணியம், மற்றும் ஏராளமானோர் நடித்துள்ளனர்.

மொட்டை ராஜேந்திரன் லவ்வர் பாயாக நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் வில்லனாக ஜெயிலர் புகழ் ஹர்ஷத் நடித்துள்ளார்.

சிங்கம்புலி சிறப்புத் தோற்றத்தில் கதையின் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு ஜோன்ஸ் ஆனந்த். பாடல்களுக்கு சமந்த் நாக் இசையமைத்திருக்கிறார். படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியிருக்கிறார். எடிட்டிங் விது ஜீவா.

விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்தப் படம் பற்றிப் பேசிய இயக்குநர் விக்னேஷ் பாண்டியன், “வாழ்வில் எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது” என்பதை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார்.

Comments (0)
Add Comment