கன்னட நடிகர் மற்றும் இயக்குனரான ரிஷப், கடந்தாண்டு வெளியான காந்தாரா திரைப்படத்திற்கு பின்னர் இந்தியா முழுவதும் பிரபலமானார். தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு தனது சர்காரி ஹிரியா பிரதாமிகா ஷாலே திரைப்படத்தில், அரசுப் பள்ளிகளை காக்க வேண்டிய அவசியத்தை நடிகர் ரிஷப் ஷெட்டி பேசியிருந்தார்.
இந்த நிலையில் அண்மையில் தனது சொந்த ஊரான கர்நாடகாவில் உள்ள கெரடி கிராமத்திற்குச் சென்ற ரிஷப், அங்கு தான் படித்த அரசு பள்ளிக்கு சென்று அப்பள்ளியைத் தத்தெடுத்தார்.
– தேஜேஷ்