பெண்களின் வாழ்வியல் உரிமைகளைப் பேசும் ‘கன்னி’!

கரீஷ்மா இயக்கத்தில் ராம் நிஷாந்த், மிருதுளா நடிப்பில், 90-களின் பின்னணியில் ஒரு பெண்ணின் கதையைச் சொல்லும் அழகான படைப்பாக உருவாகியுள்ள குறும்படம் ‘கன்னி’.

இக்குறும்படத்தின் அறிமுக விழா, சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன்: ஒரு குறும்படம் என்கிற உணர்வையே இந்தப்படம் தரவில்லை. ஒரு ஆத்மா படத்திலிருந்தது.

குறும்படத்தை எடுத்த அனன்யாவிற்கு வாழ்த்துகள். கரீஷ்மாவை பிறந்தது முதல் தெரியும். அவரிடமிருந்து இப்படி ஒரு படைப்பை நான் எதிர்பார்க்கவே இல்லை.

அவருடைய கல்லூரிக் கால வாழ்க்கையைப் படமாக எடுத்திருப்பார் என நினைத்தேன். ஆனால், மிகக் கவனமாக மிக அர்ப்பணிப்புடன் எடுக்கப்பட்ட படைப்பாக உருவாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் ஜாதிப்பிரச்சனை கதைகள் மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் கதைகளாக ஆகிவிட்டது.

பெண்ணுரிமை, வாழ்வியல் பிரச்சனை பற்றிய கதைகளே இல்லாமல் போய் விட்டது. அதைப் பேசும் படமாக இப்படம் இருப்பதாக உணர்கிறேன்.

பெண்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது.

இதில் இடம்பெற்றுள்ள வசனங்கள் எல்லாம் மெச்சூர்டாக இருந்தது.

ஃபிரேமிங் எல்லாம் மணிரத்னம் சார் மாதிரியும், கதையில் பாலச்சந்தர் சார் மாதிரியும் இருந்தது.

கரீஷ்மா தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநராக வருவார். படக்குழு அனைவருமே மிக அற்புதமான உழைப்பைத் தந்துள்ளனர்.” என்றார்.

கல்லூரி இளைஞர்களின் உழைப்பில் உருவாகியுள்ள ‘கன்னி’ குறும்படம் Moviebuff தளத்தில் பார்க்கக் கிடைக்கிறது.

Comments (0)
Add Comment