பாரதிதாசனும், கண்ணதாசனும்!

பேசும் படம்:

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் கண்ணதாசன் இதழாசிரியர் பொறுப்பில் பணியாற்றினார்.

அப்போதுதான் பாரதிதாசன் கதை, உரையாடல், பாடல்கள் எழுதுவதற்காக ஆண்டுக்கு நாற்பதாயிரம் ஊதியம் என்னும் பெரும் பொருளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார்.

கண்ணதாசன் திரைப்பாடல்களில் கோலோச்சிய காலத்தில் இலக்கியக் களத்தில் பாரதிதாசன் இடையறாது செயல்பட்டார்.

பாரதியாரின் மாணவரான பாரதிதாசன் திரையுலகில் காலடி வைத்தவரும்கூட. அவரால் திரைத்துறையில் அடைய முடியாத உயரத்தைக் கண்ணதாசன் எட்டினார்.

இருவருக்குமிடையில் நாகரிகமான இலக்கிய நட்பு இருந்தது.

கவிஞர் கண்ணதாசன் நடத்திய ‘தென்றல்’ இதழ் அலுவலகத்துக்கு (1954) புதுச்சேரி வாத்தியார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வருகை தந்தபோது எடுத்து படம்.

நன்றி: பார்த்தசாரதி ரெங்கராஜூலு முகநூல் பதிவு.

 
 
 
Comments (0)
Add Comment