கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான சினேகன் – கன்னிகா தாம்பதிக்கு 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கடந்த மாதம் 25-ம் தேதி இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருந்தன. இச்செய்தியைத் தங்களின் சமூக வலைத்தளப் பக்கத்தின் மூலமாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த தம்பதி, தங்களின் இரு குழந்தைகளுடன் நேற்று நடிகர் கமல் ஹாசனைச் சந்தித்திருக்கிறார்கள்.
கமல் இவர்களின் இரு குழந்தைகளுக்குத் தங்க வளையல்களைப் பரிசளித்து, ‘காதல்’, ‘கவிதை’ என பெயர் சூட்டியிருக்கிறார்.
இந்த நெகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட தம்பதி, ”காதலர் தினத்தில் எங்கள் தங்க மகள்களுக்குத் தங்க வளையல்களோடு, காதல் என்ற பெயரையும் கவிதை என்ற பெயரையும் அணிவித்து வாழ்த்திய, நம்மவர் எங்களின் அன்புத் தலைவர் பத்ம பூஷன் கமல்ஹாசன் அவர்களுக்கு எங்கள் அன்பின் நன்றிகள்.
நீங்களும் வாழ்த்துங்கள் காதல் – கவிதை-யை…” எனச் சமூகவலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்கள்.