கமலை இயக்கும் ‘ஸ்டண்ட் மாஸ்டர்‘கள்!

லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்த விக்ரம் -2’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, புதுமுகங்களை தேடிப்பிடித்து, அவர்கள் இயக்கத்தில் நடிக்க தேதிகள் அளித்து வருகிறார், உலகநாயகன் கமல்ஹாசன்.

ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் -2’ படத்தில் நடித்து முடித்துள்ள கமல், அடுத்து. நாக் அஸ்வின் இயக்கும் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கியுள்ளார்.

இது அறிவியல் புனைவு கதையாகும். இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

இதனிடையே கமல்ஹாசனின் 237-வது படத்தை சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் சகோதரர்கள் இயக்குவார்கள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்பறிவ் இரட்டையர்கள், ‘கேஜிஎஃப்’ படத்துக்கு ஸ்ண்ட் காட்சிகள் அமைத்து கவனம் பெற்றனர். இந்தப் படத்துக்காக இவர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

கமலை வைத்து இவர்கள் இயக்கும் படம் முழு ஆக்ஷன் படமாக இருக்கும் என தெரிகிறது. அன்பறிவ் சகோதரர்கள், ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ‘விக்ரம்’, ‘லியோ’, படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றிவர்கள்.

‘இந்தியன் 2’ படத்துக்கு ஸ்டண்ட் காட்சிகளை அமைத்துள்ள இவர்கள், ‘கல்கி’, ‘தக் லைஃப்’ ஆகிய படங்களிலும் பணியாற்ற உள்ளனர்.

அந்நியன், எந்திரன், கஜினி உட்பட பல படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய பீட்டர் ஹெய்ன், பான் இந்தியா படம்  ஒன்றில் நாயகனாக அறிமுகமாக உள்ள நிலையில் அன்பறிவ், இயக்குநர்களாக அறிமுகம் ஆக உள்ளனர்.

-பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment