பகிர்ந்துண்டு வாழுங்க.. பழக்கத்த மாத்தாதீங்க..!

- நினைவில் நிற்கும் வரிகள்

கா கா கா.. கா கா கா
ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக
அன்போட ஓடிவாங்க என்ற
அனுபவப் பொருள் விளங்க – காக்கை அண்ணாவே

நீங்கள் அழகான வாயால் பண்ணாகப் பாடுறீங்க
காகா- வென ஒண்ணாகக் கூடுறீங்க
வாங்க – கா கா கா
சாப்பாடில்லாம தவிக்குதுங்க

ஜனம் கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க
உயிர் காப்பாத கஞ்சி தண்ணி ஊத்துங்க..
என்றல் தாபால போடுறாங்க பாருங்க..
அந்த சண்டாளர் எங்கவே..

தன்னலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க ..
எச்சிலை தனிலே எரியும் சோற்றுக்கு.
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை

எத்தனையோ இந்த நாட்டிலே!
பட்சிஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரை பாக்காதிங்க..
பட்சம இருங்க.. பகிர்ந்துண்டு வாழுங்க.. பழக்கத்த மாத்தாதீங்க..
எங்க பாடுங்க .. கா கா கா.

– 1952-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘பராசக்தி’ படத்தில் கவிஞர் உடுமலை நாராயண கவி எழுதிய பாடல் வரிகள். பாடியவர்: சி.எஸ்.ஜெயராமன் இசை: ஆர்.சுதர்சனம்.

 

Comments (0)
Add Comment