நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ‘சைரன்’!

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் ‘சைரன்’. இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள நிலையில், ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில் ‘சைரன்’ படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும், வரும் 26ம் தேதி ‘ZEE5’ தளத்தில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment