‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சனுடன் இணைந்த முதல் படம் ஜெயிலர். 2023 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் சூபர் டூப்பர் ஹிட் அடித்ததோடு வசூலும் குவித்தது.
அதைத் தொடர்ந்து ஜெயிலர்-2 எனும் பெயரில் இரண்டாம் பாகமாக உருவாகிறது. தன் சினிமா வாழ்க்கையில், எந்த ஒரு இரண்டாம் பாகத்திலும் ரஜினி நடித்ததில்லை. முதன் முறையாக ஜெயிலர்-2 வில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
முதல் பாகத்தில், ரஜினியுடன் சேர்ந்து தமன்னா, சிவராஜ் குமார், மோகன்லால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் உள்ளது.
இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா பிரதான வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஃபகத் ஃபாசிலும் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார்.
இப்போது ‘ஜெயிலர்-2 ஷுட்டிங் கேரளாவில் நடந்து வருகிறது. ரஜினியைப் பார்க்க படப்பிடிப்பு நடக்கும் பகுதியில் சில நாட்களாகவே ரசிகர்கள் காலை 6 மணி முதல் இரவு வரை காத்திருந்தனர்.
இந்த தகவல் ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவில் ஷுட்டிங் முடிந்தது.
தனது காரின் சன் ரூப் வழியாக எழுந்து நின்று ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவித்து ரோடு ஷோ சென்றுள்ளார் ரஜினி.
அவரைப் பார்த்த ரசிகர்களும், பொது மக்களும் ‘ஐ லவ் தலைவா’ என ஆரவாரம் செய்தனர்.
நள்ளிரவு நேரத்திலும் தனக்காக ரசிகர்கள் காத்து இருந்ததைப் பார்த்து ரஜினி நெகிழ்ச்சி அடைந்தார்.
– பாப்பாங்குளம் பாரதி.