புதுமையைப் பேசுகிறதா ’லெனின் பாண்டியன்’?!

தமிழ் சினிமாவின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்க, ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 25, 2026 அன்று திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ளது.

32 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணையும் மெகா கூட்டணி:

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் மூன்றாம்பிறை, பகல் நிலவு, காக்கி சட்டை, கிழக்கு வாசல், இதயம் போன்ற எண்ணற்ற காலத்தால் அழியாத வெற்றிப் படங்களை அளித்த இசைஞானி இளையராஜா அவர்கள், சுமார் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்நிறுவனத்துடன் இத்திரைப்படத்தின் மூலம் கைகோர்த்துள்ளார்.

கங்கை அமரன் – ரோஜா கூட்டணி:

பிரபல இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் அவர்கள் இத்திரைப்படத்தில் கதையின் நாயகனாக முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா செல்வமணி அவர்கள் நடித்துள்ளார். இதன் மூலம் ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகை ரோஜா தமிழ் திரையுலகிற்கு மீண்டுவந்துள்ளார்.

சகோதரரின் நடிப்புக்கு அண்ணனின் இசை:

தனது தம்பி கங்கை அமரன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பது இத்திரைப்படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாகும்.

புதிய தலைமுறையின் வருகை:

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான தர்ஷன் கணேசன் இத்திரைப்படத்தில் இளம் நாயகனாக அறிமுகமாகிறார்.

ஶ்ரீதா ராவ் மற்றும் விஜே அர்ச்சனா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

டி.டி. பாலாசந்திரன் கதை எழுதி இயக்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

ஏ.எம். எட்வின் சகாய் ஒளிப்பதிவையும், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பையும், அதுரி ஜெய்குமார் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.

இணைத் தயாரிப்பாளர்களாக ஜி.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.

கிராமத்துப் பின்னணியையும், வலுவான சட்ட ஒழுங்கு கதைக் களத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: பிம்பம் டி.வி

Comments (0)
Add Comment