ஒரு நடிகன் எப்படி இருக்க வேண்டும்?

கவுண்டமணி
02.06.1996 ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் நடிகர் கவுண்டமணியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்:
 
“தன்னைப் பத்தின நிஜ ரூபத்தைப் பொத்திப் பொத்தி மூடணும். பெட்டிக் கடையில் பீடியைக் கட்டுக்கட்டா உள்ளே தான் வைச்சிருப்பான். அப்போ தான் அதுக்கு மரியாதை. அள்ளி வெளியே கொட்டிப் பரத்தி வியாபாரம் பண்ணிப் பாருங்க. பீடி விக்காது.
 
நான் விழாக்கள், பேட்டிகள்னு எதுக்கும் ஒப்புக்கிறதில்லை. கலை நிகழ்ச்சி என்ற பெயரில் துபாய், சிங்கப்பூர் போறதில்லை.
 
ரசிகர் மன்றம் இருந்தது. இப்போ மன்றத்தை எல்லாம் கலைச்சுட்டேன்.
 
என் பிறந்த நாள் என்னன்னே மறந்து போச்சு.
 
முக்கியமா டி.வி.க்குப் பேட்டி கொடுக்கிறதில்லை.
 
கவுண்டமணியை சினிமாவுலே மட்டும் பாரு. அது தான் ‘கிக்’!”
 
Comments (0)
Add Comment