‘கரகாட்டக்காரன்’ படத்தைத் தவறவிட்ட ஷோபனா!

ஒரு காலத்தில் மலையாளத் திரை உலகில் கொடி கட்டிப் பறந்தவர் ஷோபனா. அவருக்கு தமிழ் நாட்டிலும் ரசிகர் கூட்டம் உண்டு. தமிழில் ‘தளபதி’, ‘இது நம்ம ஆளு’, ‘சிவா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கேரள அரசு விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருது, தேசிய விருது என எக்கச்சக்க விருதுகளை வென்றவர்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் தான் தவறவிட்ட சினிமாக்கள் குறித்து ஷோபனா பேட்டி அளித்துள்ளார். அவர் சொன்ன தகவல்:

“கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் நடிகை கனகாவின் பாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் என்னிடம்தான் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 

ஆனால், பல்வேறு காரணங்களால் அந்தப் படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போனது.

இதேபோல், ‘த்ரிஷ்யம்’ திரைப்படத்திலும் மீனா நடித்த பாத்திரத்திற்காக முதலில் என்னையே  அணுகினார்கள்.

அந்த சமயத்தில் வேறு ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் ‘த்ரிஷ்யம்’ படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது” என்று ஷோபனா  திறந்து தெரிவித்துள்ளார்.

– பாப்பாங்குளம் பாரதி

Comments (0)
Add Comment