காயங்களிலிருந்து சினிமாதான் என்னை குணப்படுத்தியது!

மலையாள டி.வி. நிகழ்ச்சிகளில் கலக்கி வந்த நயன்தாரா, 2003-ல் வெளியான ‘மனசினக்கரே’ என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

2005-ம் ஆண்டு ‘ஐயா’ படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த், விக்ரம், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

தற்போது தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக மாறியுள்ளார்.

லேடி சூப்பர் ‘ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா, சினிமாவுக்கு வந்து 22 ஆண்டுகள் ஆகிறது.

இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கேமராவுக்கு முன்னால் நின்று 22 ஆண்டுகள் ஆகிறது. சினிமா தான் என் வாழ்க்கையின் காதலாக மாறும் என்று ஆரம்பத்தில் தெரியவில்லை.

ஆனால் ஒவ்வொரு பிரேமும், ஒவ்வொரு ஷாட்டும், ஒவ்வொரு மவுனமும் என்னை வடிவமைத்தன. காயத்தில் இருந்து என்னை குணப்படுத்தின.

என்னை நானாக மாற்றியது. இந்த சினிமாவுக்கு என்றென்றும் நன்றியுடன் இருக்கிறேன்” என்று நெகிழ்ச்சி கொண்டுள்ளார்.

Comments (0)
Add Comment